விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு... காரணம் என்ன?
நடிகர் விஜய் தேவரகொண்டா 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடைசியாக இவர் 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : “சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தவெக என்றும் களத்தில் நிற்கும்” – விஜய் பரபரப்பு அறிக்கை!
தற்போது, இவர் ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் 'கிங்டம்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சமூக பிரச்னையை முன்வைத்து திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் மே 30 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.
#Kingdom
July 04, 2025.Will see you in the cinemas 🙂 pic.twitter.com/uQUjpngygD
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 14, 2025
இந்த நிலையில், 'கிங்டம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிங்டம் வருகிற ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர். நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால், படத்திற்கான புரொமோஷன், கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.