For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய் - புகைப்படம் வைரல்!

05:01 PM Apr 08, 2024 IST | Web Editor
சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்   புகைப்படம் வைரல்
Advertisement

சாய்பாபா கோயிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Advertisement

‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.  இது விஜய்யின் 68-வது படமாகும்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும்,  அதில் அப்பா,  மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,  தாய்லாந்து,  பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது.  தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது.  இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  சாய்பாபா கோயிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்யும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.  அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement