விஜய்யால் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்த முடியும் - டிடிவி தினகரன் பேட்டி!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இருந்த அதே தாக்கத்தை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யால் ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2006 சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்த் தனியாகப் போட்டியிட்டாலும், அவர் பெரும் வாக்குகளைப் பிரித்து, அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுபோல், நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தால், 2026 தேர்தலில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவார் என டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால், அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்புதான் என்று அவர் வெளிப்படையாகக் கூறினார். குறிப்பாக, ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் ஆற்றல் விஜய்க்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.