For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரையில் மோதும் விஜய் மற்றும் ரஜினி - லேட்டஸ்ட் அப்டேட்!

02:07 PM Mar 10, 2024 IST | Web Editor
திரையில் மோதும் விஜய் மற்றும் ரஜினி   லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

நடிகர் விஜய் திரைப்படமான Greatest Of All Time திரைப்படமும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக  உள்ளதாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படியுங்கள் : “ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -திமுக எம்.பி. வில்சன் 

இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது.  Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா , மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா, பேங்காக் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்கியுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் முதல் முறையாக விஜய் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஜய் திரைப்படமான Greatest Of All Time திரைப்படமும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக  உள்ளதாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனால், இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இது குறித்த அதிகாரப்புரவமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.  இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஜெய்பீம் படம் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்ற த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.  இது ரஜினியின் 170வது படமாக உருவாகி வருகிறது.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன்,  ஃபஹத் ஃபாசில்,  மஞ்சு வாரியர்,  ராணா,  ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.  அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங்  மும்பை, கேரளா, திருநெல்வேலி என நடைபெற்று இறுதியாக ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் நடைபெற்றது.  இதுவரை 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் மீதமுள்ள காட்சிகளை விரைந்து முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Tags :
Advertisement