பராமரிப்பாளரை கடிக்க முயன்ற #snake - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பாம்பு தனது பராமரிப்பாளரை கடிக்க முயன்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 58,000 பேர் பாம்பு கடியால் இறக்கின்றனர். இந்தியாவில் 2000-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 12 லட்சம் பேர் பாம்புக் கடியால் இறந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த இறப்புகளில் 97 சதவீதம் கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், பாம்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் அனைத்து வகையான பாம்புகளையும் கையாளக்கூடிய வல்லுநர் மற்றும் பராமரிப்பாளரான ப்ரூவர் என்பவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : “எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன்” – இயக்குநர் #MariSelvaraj பதிவு!
அந்த வீடியோ பதிவில் பராமரிப்பாளரான ப்ருவர் என்பவரை பெரிய பெட்டியை திறப்பார். அதிலிருந்து பாம்பு ஓன்று வெளிவரும்போதே பராமரிப்பாளரை கடிப்பது போல் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதில் காயம் ஏதுமின்றி அவர் தப்பித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.