For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வீடியோ வெளியிட்ட நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் - உடனடியாக உதவிய சிம்பு!

08:54 PM Jun 26, 2024 IST | Web Editor
வீடியோ வெளியிட்ட நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்   உடனடியாக உதவிய சிம்பு
Advertisement

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நடிகர் சிம்பு நிதியுதவி அளித்து உதவியுள்ளார்.

Advertisement

பிரபல நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  வெங்கல் ராவ் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளார். அவர் கொடுக்கும் ரியாக்ஷன்ஸ்,  அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது.  இதன் காரணமாக தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து வந்தார் வெங்கல் ராவ்.  இவர் நடித்த சீனா தானா, கந்தசாமி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் அமைந்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.  இடையில் வடிவேலு நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருந்ததால் வெங்கல் ராவிற்கும் வாய்ப்புகள் அமையாமல் இருந்தது.  இந்த நிலையில்,  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவர், மருத்துவச் செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் தனக்கு உதவுமாறு வீடியோ வெளியிட்டு உதவி கோரியுள்ளார்.

இந்தச் சூழலில் உடல் நலக்குறைவால் ஆந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிலம்பரசன் ரூ.2 லட்சம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement