For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிதிஷ் குமாரை கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோ? - உண்மை என்ன?

03:20 PM Jun 10, 2024 IST | Web Editor
நிதிஷ் குமாரை கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோ     உண்மை என்ன
Advertisement

This news fact checked by Newschecker

Advertisement

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து நியூஸ் செக்கர் செய்தி நிறுவனம் உண்மைத் தன்மைக்கு ஆய்வுக்கு உட்படுத்தியது. இதுகுறித்து விரிவாக காணலாம்.

நிதிஷ் குமார் குறித்து பரவும் வீடியோ :

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.  இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டது.  இவ்விழாவில், உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.  அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியோடு சேர்த்து மொத்தம் 72பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களில் 30பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 5பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் 36பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  அந்த வீடியோவின் கேப்சனில் ”நிதீஷ் குசும்பர், தன் பவரை காட்டுவதற்காக சும்மானாச்சியும் நடந்து வந்து மோடியை எழுந்து வணக்கம் சொல்ல வைத்துவிட்டு கெத்தா சிரித்தபடி திரும்பிப் போறார்..!” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தது.

உண்மை சரிபார்ப்பு :

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், கடந்த மார்ச் 30, 2024 அன்று ”Watch Video: Nitish Kumar Ignores Kharge While Greeting New Alliance Partners During Bharat Ratna Presentation Ceremony At Rashtrapati Bhavan” என்று Freepressjournal வெளியிட்டிருந்த செய்தி வீடியோ கிடைத்தது.

அதில், PTI வெளியிட்டிருந்த பாரத ரத்னா விருது வழங்கும் விழா வீடியோ நமக்குக் கிடைத்தது. “Bihar CM Nitish Kumar meets PM Modi during Bharat Ratna presentation ceremony at Rashtrapati Bhavan.” என்று வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் மோடி, நிதிஷ் குமாரை எழுந்து வணங்கும் வைரல் வீடியோ காட்சியும் இடம்பெற்றிருந்தது. எனவே, தற்போது வைரலாகும் வீடியோ கடந்த மார்ச் மாதமே எடுக்கப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

முடிவு :

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று பரவும் வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டது என்பது தகுந்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம்.

Note : This story was originally published by Newschecker and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement