துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர்ஜெகதீப் தன்கர் தனது உடல் நிலையை காரணத்தால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தலை அறிவித்தது.
இதையடுத்து பாஜக கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
மேலும், ஷிரோமணி அகாலி தளம்,பாரத ராஷ்டிர சமிதி,பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் நாட்டின் அடுத்த துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவில் காலை முதலே இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
காலை முதலே பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களும் ஆகியோரும் வாக்களித்தனர்.
இதனையடுத்து மாலை 5 அமணிக்கு வாக்கு பதிவு நிறைவுற்றது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த பின் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.