குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும். இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை செயலாளர் P.C.மோடியிடம் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளரான சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திருச்சி சிவா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் பிற தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.