Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுவை செல்கிறார் துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ...!

இந்திய துணைக் குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
09:06 PM Dec 10, 2025 IST | Web Editor
இந்திய துணைக் குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
Advertisement

நாட்டின் 14வது துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார். இதனை நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.

Advertisement

இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரின் மாநிலங்களவை தலைவராகவும் சி.பி. ராதாகிருஷ்ணன்  செயல்பட்டு வருகிறார்.  அவர் குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும்.

இந்த நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் டிசம்பர் 29ம் தேதி நடக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்  30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்  புதுவை பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  துணைக் குடியரசுத் தலைவர் அங்கு, புதிதாக அமைக்கப்படுள்ள 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.

Tags :
convicationceremonycpradhakrishnanlatestNewspudhucherrypudhucherryuniversityVicePresident
Advertisement
Next Article