உதகையில் கடும் குளிர் | பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது, இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்
மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வரும் நிலையில் அவ்வப்போது மிதமான
மழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட்
உள்ளிட்ட பகுதிகளிலும் லவ்டேல், சாந்தூர், கேத்தி பாலடா, கெரடா மட்டம்
உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் கடும் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை
பெய்து வருகிறது. சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.