For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேங்கைவயல் விவகாரம் - உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

10:09 PM Feb 12, 2024 IST | Web Editor
வேங்கைவயல் விவகாரம்   உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி
Advertisement

வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க
தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் கடந்த ஓராண்டாக சிபிசிஐடி
போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இதுவரை 159 நபர்களிடம்
விசாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். மேலும் தமிழக அரசின் சார்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த விசாரணை அறிக்கையில் இந்த வழக்கானது மிகவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டியதொரு வழக்கு என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிபிசிஐ போலீசார் ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு எடுக்கப்பட்டிருந்த டிஎன்ஏ பரிசோதனையும் ஒத்துப் போகவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி அடுத்த
மாதம் ஓய்வு பெற உள்ளார். அதோடு தற்பொழுது உடல்நிலை காரணமாக
விடுமுறையிலும் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மூன்று மாதத்திற்குள் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் புதிய டிஎஸ்பியாக கல்பனா நியமிக்கப்பட்டார்.

மேலும் ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை
ஒத்துப் போகவில்லை என்று ஆய்வாறிக்கையில் தெரிய வந்ததை தொடர்ந்து சிபிசிஐடி
போலீசார் இறையூர், முத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் பத்து
பேருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய 10 நபர்களிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது 10 பேரும் தங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனைக்கு
அனுமதி கேட்டு அளித்திருந்த மனுவை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு
நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தள்ளுபடி செய்தார்.

Tags :
Advertisement