For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Vengaivayal | குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

வேங்கை வயல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
06:23 PM Jan 27, 2025 IST | Web Editor
 vengaivayal    குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான வழக்கு    சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Advertisement

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் கடந்த 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் வேங்கைவையல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர்கள் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருந்தது.

Advertisement

தொடர்ந்து சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் குற்றப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளவர்கள் சார்பிலும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் பட்டியலின மக்களாக இருப்பதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவை நீக்கி இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரண்டு மனுக்களும் நீதிபதி வசந்தி முன்பு இன்று (ஜன.26) விசாரணை வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கின் முதல் புகார்தாரரான கனகராஜ் விசாரிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறித்து அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.

குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்று வாதிட்டார். அதே போல் சிபிசிஐடி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “குற்றவாளிகள் மூன்று பேரும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் இந்த வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்” என்று வாதிட்டார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை நாளை மறுநாள்(ஜன.29) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

Tags :
Advertisement