For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!

11:41 AM Nov 11, 2023 IST | Web Editor
தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை  ரூ 3 கோடிக்கு மேல் வர்த்தகம்
Advertisement

தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.  ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும்  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement

சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை
சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும்.  இச்சந்தைக்கு சேலம்
மாவட்டமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.  வெள்ளாடுகள்,  செம்மறி ஆடுகள்,  மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.  இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் வீரகனூரில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆடு, மாடுகளை விற்பனை செய்வதற்காக ஏராளமான விவசாயிகள் சுமார் ஆயிரக்கணக்கான ஆடுகளையும், 500க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொண்டு வந்தனர்.

வழக்கமாக வீரகனூர் ஆட்டு சந்தைக்கு கறிக்கடை வியாபாரிகள் அதகளவில் வருவார்கள். ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர்,  வாழப்பாடி,  தலைவாசல்,  சேலம்,  தம்மம்பட்டி
உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் இறைச்சி
கடைக்காரர்களும் கூடியதால் சந்தை களைகட்டியது.

மேலும் தீபாவளிக்காக ஆட்டுக்கறி வழங்கும் சீட்டுக்களை நடத்துபவர்களும் அதிகளவில் குவிந்ததால் ஆட்டுச்சந்தை களைகட்டியது.  விறுவிறுப்பாக நடந்த ஆட்டு சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

ஆடுகள் தரத்திற்கேற்றவாறு உயிருடன் ஒரு கிலோ எடையின் மதிப்பளவில் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை என ஒரு ஆட்டிற்கு 500 ரூபாய் விலையேற்றத்துடன்
விற்பனையானது.  இதில் ஆடுகள் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள்  தெரிவித்தனர். இரவு நடைபெற்ற மாட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் என மொத்தம் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement