நாகையில் வி.ஏ.ஓ அதிகாரி கொலை வழக்கு - இரண்டு திருநங்கைகள் கைது!
நாகை மாவட்டம் வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2024 முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரனைக்காக நாகை நீதிமன்றத்திற்கு சென்றவர் செல்லூர் ஈசிஆர் சாலையில் முகத்தில் பயங்கர காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜாராமன் போதையில் படுத்திருந்த போது அங்கு வந்த செல்லுரைச் சேர்ந்த நிவேதா, ஶ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவர் முகத்தில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரையும் போலிசார் கைது செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.