For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”வந்தாரா” விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமனது என அறிவிக்க வேண்டும்’ - உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனந்த் அம்பானியின ”வந்தாரா” விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமனது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
04:44 PM Aug 07, 2025 IST | Web Editor
ஆனந்த் அம்பானியின ”வந்தாரா” விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமனது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
”வந்தாரா” விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதமனது என அறிவிக்க வேண்டும்’   உச்ச நீதிமன்றத்தில் மனு
Advertisement

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி ஆவார்.  இவர் வந்தாரா என்னும்  விலங்குகள் நலவாழ்வு மையம் ஒன்றை  நடத்தி வருகிறார். இது குஜராத்தின் ஜாம்நகரில், ரிலையன்ஸ் சுத்திகரிப்பு வளாகத்திற்குள் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வந்தாராவில் 2,000 க்கும் மேற்பட்ட  அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. 

Advertisement

இந்த நிலையில் ஆனந்த அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய சுகின் இந்த  மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ”அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய பல்வேறு உயிரினங்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வந்தாரா மையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை கைப்பற்றி அவற்றை சுதந்திரமாக விடுவிக்க வேண்டும்.அதே போன்று யானைகள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும்.வந்தராவில் வளர்க்கப்பட்டு வரக்கூடிய, அழிவில் விளிம்பில் இருக்கக் கூடிய விலங்குகள் அனைத்தும் மறுவாழ்வு என்ற பெயரில் 1.5 லட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன .அதில் பல பறவைகள், யானைகள் உயிரிழந்துள்ளன.வந்தாராவில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைளை விசாரிக்க உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும். ஏற்கனவே திரிபுரா உயர்நீதிமன்றம் அமைத்த வந்தாரா விசாரணைக் குழுவை கலைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement