வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படியுங்கள்: செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் | ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!
பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் புயல் காரணமாக சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக வண்டலூர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து 2 நாட்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (டிச.8) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.