ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - ரங்கா ரங்கா கோவிந்தா என பக்தர்கள் பரவசம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் மார்கழி மாத சொர்க்கவாசல் திறப்பு பல்வேறு ஆலயங்களில் நடைபெற்றாலும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம், உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன. இந்த கோயிலில் வைகுந்த ஏகாதேசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 4 மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவரங்கத்தில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த வாரம் துவங்கி நாள்தோறும் நம்பெருமாள் திருவரங்கர் பகல் பத்து உற்சவத்தில் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து, சிறப்பு வாய்ந்த அலங்காரமான நாச்சியார் திருக்கோலம் என்கிற மோகன் அலங்காரத்தில் நேற்று காட்சி தந்து பின்னர் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் வைகுந்த ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 3 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் ரத்தின அங்கியில் எழுந்தருளிய பரமபத வாசல் அருகே கொண்டு வரப்பட்டார்.
பின்னர் 4 மணி அளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு நம்பெருமாள் வலம் வந்தார். ஆயிரகணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா என்கிற கோஷங்கள் முழக்கத்தொடு சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டனர்.