வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி நீர்
திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் கள்ளந்திரி இருப் போக விவசாயத்திற்கும், திருமங்கலம் ஒரு போக விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதியின் குடிநீர் தேவைக்காக 1,899 கன அடி என வைகை அணையில் இருந்து 5,899 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில், வெளியேற்றப்படும் நீர் செல்ல முடியாத அளவிற்கு மதுரை கோரிப்பாளையம் தரைப்பாலம் பகுதியில் வைகை ஆறு முழுவதும் ஆகாய தாமரை செடிகள் இருப்பதால் திறக்கப்பட்ட தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆரப்பாளையம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலை நீரில் மூழ்கியது.
இதையும் படியுங்கள்:பிரிட்டன் விசா பெறுவோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!
அதனை தொடர்ந்து, நீரில் மூழ்கிய சாலையில் ஆபத்தான முறையில் செல்லும் பயணிகள் போதிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலையில் உயிரிழப்புகள் நேரிடும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து, காவல் துறையினரால் அப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஆற்றின் பாலத்தில் பொதுமக்கள் அமர்வது, ஆற்றில் குளிப்பது, வெள்ளத்தில் நடுவே செல்பி எடுப்பது, மீன் பிடிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட்ட வேண்டாம் என காவல் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.