#UttarPradesh | ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!
உத்தர பிரதேசத்தில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கன்னூஜ் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.
இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 23-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ப்டடனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் மற்றவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.