For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#USElection | அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பில் வெளியான தகவல்!

12:54 PM Oct 25, 2024 IST | Web Editor
 uselection   அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு  கருத்து கணிப்பில் வெளியான தகவல்
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட புதிய கருத்து கணிப்பின் முடிவுகளின் படி, முன்னால் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

Advertisement

அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப்புக்கு இடையே நடைபெற்ற நேரடி விவாதம் கமலா ஹாரிசுக்கு சாதகமாக அமைந்தது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

இந்தியாவை பொருத்தவரையில் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மற்றபடி பொதுமக்கள் அனைவரும் தேர்தல் கமிஷன் அறிவித்த நாளிலேயே வாக்களிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

வேலை, உடல்நல பிரச்சினைகள் அல்லது பயணம் போன்ற தேர்தல் நாளில் வாக்களிப்பதில் தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு இது நடைமுறை பயனுள்ளதாக அமைகிறது. அத்துடன், அதிக அளவில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதையும் உறுதி செய்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே இருக்கும். கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத மக்கள் தபால் மூலம் வாக்களிக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 2.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தொடர்பான கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 47 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகவும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவரைவிட 2 சதவீத வாக்குகள் குறைவாக அதாவது 45 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement