அமெரிக்கா : டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனை காரணமாக தெற்கு - மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் முகாம் ஒன்று இருந்துள்ளது. இதனால் முகாமில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்டறிந்து காணாமல் போனவர்களை மீட்கும் பனி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 14 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், "நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.