குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவரது மனைவி உஷா, மற்றும் மூன்று குழந்தைகளுடன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். டேலி விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும அவரது குடும்பத்தினரை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் வரவேற்றார்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இருதரப்பு வர்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வரி விதிப்பு, சந்தை அணுகல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் முதல் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லியில் இருந்து ஜெய்பூருக்கு இன்றிரவு புறப்பட்டுச் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கு அம்பர் கோட்டை உள்பட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நாளை பார்வையிட உள்ளனர்.