For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸா படுகொலையை கண்டித்து அமெரிக்க துணை தூதரக முற்றுகை - தமிமுன் அன்சாரி கைது!

07:04 PM Aug 04, 2024 IST | Web Editor
காஸா படுகொலையை கண்டித்து அமெரிக்க துணை தூதரக முற்றுகை   தமிமுன் அன்சாரி கைது
Advertisement

காஸா படுகொலையை கண்டித்து  அமெரிக்க துணை தூதரக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரியை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், மாநிலத் தலைவர்  தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. காஸாவில் நடத்தப்படும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணை போகும் அமெரிக்க அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய அவர்,

“காசாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் குழந்தைகளும், பெண்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இஸ்ரேலை எதிர்க்கும் அதே நேரத்தில், அதற்கு துணை போகும் அமெரிக்காவையும் எதிர்த்து கண்டனங்களை எழுப்பி வருகிறோம்” எனப் பேசினார்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்கா துணை தூதரகத்தை முற்றுகையிட சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியினரை வழியிலேயே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். அப்போது அக்கட்சியின் மாநிலத் தலைவரான தமிமுன் அன்சாரியையும் கைது செய்தனர்.

Tags :
Advertisement