For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!

01:30 PM Feb 05, 2024 IST | Web Editor
தேர்தல் விதிமீறல்  12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம் பி க்கு 6 மாதங்கள் சிறை
Advertisement

உத்தரப்பிரதேசம் தேர்தலில் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச பாஜக எம்.பியான எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி,  மாலை 6:50 மணியளவில் லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர், பஜ்ரங் நகர் பகுதிகளில்,  பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை கடந்து  பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் மீது  தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்கள் ; “நீங்கள் அளித்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்தது..!” - ஸ்பெயின் தமிழர்களிடையே முதலமைச்சர் உரை

இதையடுத்து,  நிர்ணயிக்கப்பட்ட பிரசார நேரம் முடிவடைந்த பின்னரும் பொதுக்கூட்டத்தை நடத்தியதற்கு,  மேலும் ஒரு வழக்கு ரீட்டா பகுகுணா ஜோஷி மீது அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  காவல் துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து, செப்டம்பர் 12, 2012 அன்று ஜோஷிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து,  பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 இன் கீழ் முறையாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.  அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  ஜோஷி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ரீட்டா பகுகுணாவுக்கு 6 மாத சிறை தண்டனையுடன் ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் லக்னோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Tags :
Advertisement