”கடைசி மூச்சு இருக்குற வரை...” - சசி குமாரின் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட டிரெய்லர் வெளியானது!
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் வருகிற மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.
முன்னதாக இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(ஏப்ரல்.23) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரில் சசிகுமார் குடும்பம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் வந்து அகதியாக குடியேறியது போலவும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இந்த பிரச்னைக்கு மத்தியில் ‘என் உடம்பில் கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் நான் உங்களை பார்த்துபேன்’ என்ற வசனங்களுடன் சசிகுமார் தன் குடும்பத்தை அரவணைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை தவிர்த்து டிரெய்லரில் ஆங்காங்கே கலகலப்பான நகைச்சுவையான வசனங்களும் இடம்பெற்றுள்ளன.