பயிற்சி மையங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!
02:16 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement
பயிற்சி மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு மத்திய கல்வி அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Advertisement
மாணவர்கள் தற்கொலை, போதிய கட்டமைப்பு வசதி இல்லாமை என பல குற்றச்சாட்டுகள் பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த குற்றசாட்டுகளை தடுக்கும் பொருட்டு மத்திய கல்வி அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில்,
- பட்டப்படிப்புக்கும் குறைவாகப் படித்துள்ள நபர்களைப் பயிற்சி மையங்களில் ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.
- நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற வைப்பது போன்ற தவறான வாக்குறுதிகளை அளித்துப் பெற்றோர்களைத் திசை திருப்பி மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது.
- 16 வயதுக்கு உட்பட்டோரை எக்காரணம் கொண்டும் பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது.
- இடைநிலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களை மட்டுமே பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும்.
- பயிற்சி மையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு ஏற்ப முறையான கட்டணங்களை மட்டும் வசூல் செய்ய வேண்டும். அதை மீறி அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் அதற்கான முழு தொகையைச் செலுத்தி விட்டு பாதியில் பயிற்சியை நிறுத்தினால் மீதமுள்ள தொகையை 10 நாள்களுக்குள் பயிற்சி மையங்கள் திருப்பி வழங்க வேண்டும்.
- அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றாத பயிற்சி மையங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது பயிற்சி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த 3 மாதங்களுக்குள் ஏற்கெனவே உள்ள பயிற்சி மையங்கள், புதிய மையங்கள் என அனைத்துப் பயிற்சி மையங்களும் பதிவு செய்திருக்க வேண்டும். பயிற்சி மையங்களின் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்பார்வையிட வேண்டும்' குறிப்பிடப்பட்டுள்ளது.