For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை முடக்கமா? மத்திய அரசு சொல்வது என்ன?

12:03 PM Jul 27, 2024 IST | Web Editor
இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை முடக்கமா  மத்திய அரசு சொல்வது என்ன
Advertisement

இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Advertisement

இந்தியாவில் புதிதாக திருத்தியமைப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. வாட்ஸ்ஆப் தகவல்களின் மறையாக்கத்தை கைவிட வேண்டுமென கட்டயப்படுத்தினால், இந்தியாவில் செயல்பாட்டை நிறுத்துவோம் என்று உயர்நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!

இந்நிலையில், பயனர்களின் தகவல் பகிர்வு தொடர்பான மத்திய அரசின் உத்தரவுகளால், இந்தியாவில் சேவையை நிறுத்த வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்கா கேள்வி எழுப்பினார். இக் கேள்விக்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது :

"இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக வாட்ஸ்ஆப் அல்லது அதன் தாய்நிறுவனமான மெட்டா தரப்பில் எந்தவொரு திட்டமும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படவில்லை. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில், கணினி தளங்களில் எந்தவித குற்றங்களும் நிகழாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-இன்கீழ் மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பிக்கிறது "

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Tags :
Advertisement