கோவை கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
தமிழ்நாடு வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்தார்.
04:20 PM Jul 18, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Advertisement
கோயம்புத்தூர் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த ஆலோசனையில்,
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை மற்றும் தொழில் துறை வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கோயம்புத்தூரில் நடந்த ஆலோசனைக்கு பின் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திருப்பூர் சென்றுள்ளார். அதன் பிறகு பிற்பகல் சாலை மார்க்கமாக பாலக்காடு செல்கிறார் என தெரிவிக்கப்பட்டது