மத்திய பட்ஜெட் 2024-2025: பீகார் கேட்டதும்... கிடைத்ததும்...
12:48 PM Jul 23, 2024 IST
|
Web Editor
Advertisement
பீகார் மாநிலத்திற்கு பல சிறப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பீகார் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நேற்று நிராகரித்தது. ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றால் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அவற்றை பீகார் மாநிலம் பூர்த்தி செய்யவில்லை என்பதால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இது பாஜக ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக அமைந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தற்போது அதனை ஈடுசெய்யும் விதமாக பட்ஜெட் தாக்கலில் பீகாருக்கு பல திட்டங்களை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன்படி பீகாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்;
- பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- கயா பகுதியில் தொழில்துறை முனையம்
- கயா முதல் பஞ்சாப் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம்
- பீகார் மாநிலத்திற்கு புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
- வெளிநாடுகளில் இருந்து கடன்பெற பீகாருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
- ரூ.11,500 கோடியில் பீகாரில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- பீகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், பாசனத்திற்கும் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பீகாரில் வெள்ள பாதிப்பை தடுக்க புதிய திட்டங்கள்.
- காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.
- பீகார் கயா மற்றும் புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.
- பீகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது .
- நாலந்தா பல்கலை.யின் மேம்பாட்டுக்கும், சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கூடுதல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Article