For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் - எங்கே தெரியுமா?

03:53 PM Apr 20, 2024 IST | Web Editor
ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள்   எங்கே தெரியுமா
Advertisement

காஷி எக்ஸ்பிரஸின் 2வது ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளின் கூட்டம் அலைமோதியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரெயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  இதனால் தொலை தூர ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதை காணமுடியும்.  முன்பதிவு செய்த பெட்டிகளில் கூட சில நேரங்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் ஏறிவிடுவதையும்,  இதனால் அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதிபடும் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில்,  மும்பையிலிருந்து உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரமான கோரக்பூருக்கு செல்லும் காஷி எக்ஸ்பிரஸின் 2வது ஏசி பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளின் கூட்டம் அலைமோதியதை கண்டு செய்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  முன்பதிவு செய்யாத பயணிகள் கழிவறைக்கு செல்லும் பாதையிலும், பெட்டியின் கதவுகளின் அருகிலும் நின்றனர்.  கதவுகள் திறந்திருந்ததால், ஏசி சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அட்னான் பின் சுபியான் என்ற பயணி,  அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.  அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பிற அதிகாரிகளை குறிப்பிட்டு,  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அந்த பயணி, “அஸ்வினி வைஷ்ணவ்,  சார்,  2-வது ஏசி பெட்டியின் நிலைமையைப் பாருங்கள்.  உணவு இல்லை,  தண்ணீர் இல்லை. கழிவறைக்கு செல்ல இடமில்லை. ஏசி வேலை செய்யவில்லை,  கதவு திறந்தே உள்ளது.  தயவு செய்து நடவடிக்கையும் எடுங்கள்” என்று கூறி எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்தார்.  இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement