For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!

06:48 PM Apr 05, 2024 IST | Web Editor
“இந்தியாவின் தேர்தல் குறித்து ஐநா கவலை கொள்ளத் தேவையில்லை”   மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்
Advertisement

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐநா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Advertisement

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

இந்நிலையில், தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா.சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள். எனவே அது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.

ஏற்கெனவே இந்தியாவில் மனித உரிமைகள் குறித்து ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன. அதற்கு இந்தியா தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு தூதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதே பிரச்னையை எழுப்பியிருந்த ஐ.நா சபைக்கும் இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags :
Advertisement