For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம் : உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்!

உக்ரைன், ரஷியா போர் நிறுத்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
08:35 AM Mar 15, 2025 IST | Web Editor
உக்ரைன்   ரஷியா போர் நிறுத்தம்   உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த புதின்
Advertisement

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வரஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகின்றார். இதனிடையே சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement

போர் தொடங்கியதில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதற்கிடையே, உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் நிபந்தனைகளுடன் கூடிய சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது, "போர் நிறுத்தம் தொடர்பான உக்ரைனின் திட்டத்தை மதிப்பிடுவதற்கு முன், உக்ரைனில் ஏற்பட்ட மோதலை தீர்ப்பதில் இவ்வளவு கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சீன அதிபர், இந்திய பிரதமர், பிரேசில் அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஆகியோர் இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனென்றால் இது விரோதங்களையும், மனித உயிரிழப்பையும் நிறுத்துவதற்கான ஓர் உன்னதமான பணியாகும். போர் நிறுத்தம் தொடர்பான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம். இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement