”அக்டோபர் 8ல் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர்”
இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இந்த மாதம் 8,9 தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்.
இந்த பயணத்தில், அக்டோபர் 9 ஆம் தேதி இரு பிரதமர்களும் மும்பையில் சந்தித்து இந்தியா- இங்கிலாந்து இடையிலான உறவு குறித்து விவாதிக்கின்றனர். இதில் 'விஷன் 2035' என்னும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, காலநிலை, எரிசக்தி, சுகாதாரம், கல்வி உள்ளடக்கிய 10 ஆண்டு திட்டங்கள் பற்றி விவாதிக்கின்றனர். மேலும் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் மும்பையில் நடைபெறும் 6வது உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்துகின்றனர்.
முன்னதாக, பிரதமா் மோடி கடந்த ஜூலையில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியா - பிரிட்டன் ஆகிய இரு நாடுகளிடையில் ‘விரிவான பொருளாதாரம் மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ)’ என்ற தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.