போலி கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை!
பல்கலைகழகத்தின் மானிய குழுவான யுஜிசி செயலர் மணீஷ் ஜோஷி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,
"யுஜிசி-யின் சட்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளும், சான்றிதழ்களும் மட்டுமே உயர்கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை.
ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவர்ச்சியாக விளம்பரம் செய்து மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கி பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவர்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு போலியான நிறுவனங்கள் யுஜிசி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பட்டியல் https://www.ugc.gov.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் சேரும் முன்பு மாணவர்களும், பெற்றோரும் அவற்றை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.