For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TVK முதல் மாநாடு... தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!!

10:45 AM Oct 04, 2024 IST | Web Editor
 tvk முதல் மாநாடு    தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் முதல் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று மாநாட்டுக்கான பூஜை நடைபெற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களே, வணக்கம்‌. உங்களை நானும்‌, என்னை நீங்களும்‌ நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்‌? நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில்‌, நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின்‌ அடிப்படையில் தான்‌ இந்தக்‌ கடிதம்‌. அதுவும்‌ முதல்‌ கடிதம்‌. தமிழ்நாட்டு மக்களுக்காக நாம்‌ உழைக்க வேண்டூம்‌. இன்னமும்‌ முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத்‌ தேவைகளை நிரந்தரமாகப்‌ பூர்த்தி செய்ய வேண்டும்‌. அதை, அரசியல்‌ ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நீறைவேற்றிக்‌ காட்ட வேண்டும்‌. இதுதான்‌, என்‌ நெஞ்சில்‌ நீண்ட காலமாக அணையாமல்‌, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும்‌ ஒரு லட்சியக்‌ கனல்‌.

அரசியல்‌ கொள்கைப்‌ பிரகடன மாநாடு

இன்று, நமது முதல்‌ மாநில மாநாட்டுக்கான கால்கோள்‌ விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத்‌ திடல்‌ பணிகளுக்கான தொடக்கம்‌. ஆனால்‌, நம்‌ அரசியல்‌ களப்‌ பணிகளுக்கான கால்கோள்‌ விழா என்பதும்‌ இதில்‌ உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும்‌ நீங்கள்‌ அறிவீர்கள்‌. நம்‌ மாநாடு எதற்காக என்பதை நீங்கள்‌ அறிவீர்கள்தானே?. நம்‌ கழகத்தின்‌ முதல்‌ மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல்‌ கொள்கைப்‌ பிரகடன மாநாடு. இன்னும்‌ சரியாகச்‌ சொல்ல வேண்டுமெனில்‌, இது நம்முடைய கொள்கைத்‌ திருவிழா. அதுவும்‌ வற்றிக்‌ கொள்கைத்‌ திருவிழா. இப்படிச்‌ சொல்லும்போதே, ஓர்‌ எழுச்சி உணர்வு, நம்‌ நெஞ்சில்‌ தொற்றிக்கொள்கிறது. இது, தன்‌ தாய்மண்ணை நிதமாக நேசிக்கும்‌ அனைவருக்கும்‌ இயல்பாக நிகழ்வதுதான்‌.

ராணுவக்‌ கட்டுப்பாட்டுடன்‌ இயங்குவர்‌

இந்த வேளையில்‌, ஒன்றே ஒன்றை மட்டும்‌ அழுத்தமாகச்‌ சொல்ல வேண்டும்‌ என விரும்புகிறேன்‌. அதை நாம்‌ எப்போதும்‌ ஆழமாக மனத்தில்‌ பதிய வைத்துக்கொள்ள வேண்டும்‌. பொறுப்பான மனிதனைத் தான்‌ குடும்பம்‌ மதிக்கும்‌. பொறுப்பான குடிமகனைத்தான்‌ நாடு மதிக்கும்‌. அதிலும்‌ முன்னுதாரணமாகத்‌ திகழும்‌ மனிதனைத்தான்‌ மக்கள்‌ போற்றுவர்‌. மாநாட்டுக்கான ஏற்பாடுகள்‌ தொடங்கி, மாநாட்டில்‌ பங்கேற்பது வரை நம்‌ கழகத்தினர்‌ ராணுவக்‌ கட்டுப்பாட்டுடன்‌ இயங்குவர்‌ என்பதை இந்த நாடும்‌ நாட்டு மக்களும்‌ உணர வேண்டும்‌. நாம்‌ உணர வைக்க வேண்டும்‌. நம்‌ கழகம்‌, மற்ற அரசியல்‌ கட்சிகள்‌ போல்‌ சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல்‌ மிக்கப்‌ பெரும்படை. இளஞ்சிங்கப்‌ படை. சிங்கப்‌ பெண்கள்‌ படை. குடும்பங்கள்‌ இணைந்த கூட்டுப்‌ பெரும்படை.

நிரூபித்துக்‌ காட்ட வேண்டும்‌

ஆகவே, நம்மிடம்‌ உற்சாகம்‌ கருக்கலாம்‌. கொண்டாட்டம்‌ இருக்கலாம்‌. குதூகலம்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, படையணியினர்‌ ஓரிடத்தில்‌ கூடினால்‌, அந்த இடம்‌ கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல்‌ பக்குவம்‌ நிறைந்ததாகவும்‌ இருக்கும்‌ என்பதையும்‌ நாம்‌ நிரூபித்துக்‌ காட்ட வேண்டும்‌. இவர்களுக்கு அரசியல்‌ என்றால்‌ என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால்‌ என்னவென்று தெரியுமா? களத்தில்‌ தொடர்ச்சியாக நீன்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம்‌ மீது வீசுவதில் அத்த விருப்பம்‌ கொண்டவர்களாகச்‌ சிலர்‌ இருக்கின்றனர்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement