For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TVK மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! நிபந்தனைகள் என்னென்ன?

06:51 AM Sep 26, 2024 IST | Web Editor
 tvk மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி  நிபந்தனைகள் என்னென்ன
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நடைபெற போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

Advertisement

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 23ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அக்.27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நடைபெற விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 33 நிபந்தனைகளுடன் இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள்,

  • மாநாடு நடைபெறும் போது வலது பக்கம் வாகனத்தை நிறுத்திவிட்டு இடது பக்கம் மாநாட்டிற்கு வரக்கூடாது ஆகையால் இடதுபுறமே வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • மாநாட்டிற்கு குழந்தைகள் அனுமதி இல்லை.
  • கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
  • அருகே ரயில்வே தண்டவாளம் இருப்பதால் அந்தப் பக்கம் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்க வேண்டும்.
  • மாநாடு நடைபெறும் இடம் சுற்றி மூன்று கிணறுகள் உள்ளதால் அந்த கிணறுகளை மூட வேண்டும்.
  • மாநாடு நடைபெறும் இடங்களில் போதிய கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.
  • தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அலங்கார வளைவு வைக்கக்கூடாது. பட்டாசுகள் வெடிக்க கூடாது.
  • தமிழ வெற்றிக் கழக தொண்டர்கள் சாலையோரம் பேனர்களை வைக்கக்கூடாது
  • மாநாட்டுக்கு வருபவர்களுக்கு போதிய உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • மேடையில் யார் யார் அமரப் போகிறார்கள்? யார் யார் பேசப் போகிறார்கள்? என்ற விவரங்களை முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.
  • எந்தெந்த பகுதியில் இருந்து யார் தலைமையில் மாநாட்டிற்கு வரப் போகிறார்கள்? என்ற விவரங்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • மேடை அமைப்பது தொடர்பாக பொதுப்பணி அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும்.
  • மின்சாதன பொருட்கள் பயன்படுத்துவது குறித்து மின்வாரிய பொறியாளிடம் அனுமதி வாங்க வேண்டும்.
  • மருத்துவ சேவைக்கு மருத்துவத்துறையில் அனுமதி பெற வேண்டும்.
  • மின்வாரிய பொறியாளரிடம் மின்சாதன பொருட்கள், ஒயர்கள் செல்லும் பாதையில் நாற்காலிகள் போடக்கூடாது.
  • இது போன்ற மொத்தம் 33 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Tags :
    Advertisement