'போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது' | ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் மீண்டும் கேள்வி!
ஞானவேல்ராஜாவின் இந்த கடிதம் குறித்து இயக்குநர் சசிகுமார் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஞானவேல்ராஜா முன்வைத்து கடுமையாக பேசினார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் ’அமீர் அண்ணாவிடம்’ வருத்தம் தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
.@GnanavelrajaKe sir issues a statement of clarification.#Paruthiveeran pic.twitter.com/7LVzmtU77B
— Studio Green (@StudioGreen2) November 29, 2023
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி! அன்புடன் ஞானவேல்ராஜா” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஞானவேல்ராஜாவின் இந்த கடிதம் குறித்து இயக்குநர் சசிகுமார் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி அவ்ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது' திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்தி விட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.