For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஞ்சிபுரம் மேயர் பதவி : சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள் - நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா ?

11:05 AM Jul 28, 2024 IST | Web Editor
காஞ்சிபுரம் மேயர் பதவி   சுற்றுலா சென்ற 22 கவுன்சிலர்கள்   நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா
Advertisement

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை தொடர்ந்து நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளநிலையில், 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. இத்தேர்தலுக்கு பின் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவியேற்றார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபர் இருந்து வருகிறார். இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக மேயருக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இச்சூழலில் மேயர் மகாலட்சுமி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில், இவர்கள் கலந்து கொள்வார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் 10 பேரும் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுகவில் 33 பேரும், விசிக, காங்கிரஸில் தலா ஒரு கவுன்சிலர் என ஆளுங்கட்சி தரப்பில் 35 பேர் உள்ளனர். இதில் மேயருக்கு எதிராக திமுக 17, அதிமுக 8, பாமக 2, சுயேட்சை 4, பாஜக, தமாகா என மொத்தம் 33 பேர் உள்ளனர்.

Tags :
Advertisement