திருச்சி விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! 2 பேரிடம் தீவிர விசாரணை!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 2 பயணிகளிடமிருந்து 78 லட்சம்
பதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
அந்த விமானத்தில் வந்து பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் ரூ.51,19,774 மதிப்புள்ள 682 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தார். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி ரூ.27,02,520 மதிப்புள்ள 360 கிராம் எடை க்ல்ண்ட தங்க செயினை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இரண்டு பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1.42 கிலோ எனவும் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 78,22, 294 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
தங்கத்தை கடத்தி வந்த நபர்களை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு 1.42 கிலோ எடை உள்ள தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.