Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திருச்சி சூர்யா நீக்கம் - பாஜக திடீர் அறிக்கை!

07:19 AM Jun 20, 2024 IST | Web Editor
Advertisement

பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கட்சித் தலைமையைப் பற்றி ஆதாரமின்றி அவதூறு பரப்பியதாகவும் களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி,  திருச்சி சூர்யா, கல்யாணராமன் இருவரும் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க-வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் ஆர்.எம். சாய்சுரேஷ் குமரேசன் புதன்கிழமை (ஜூன் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.

அதே போல, பா.ஜ.க மாநில அலுவலக செயலாளர் எம். சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பா.ஜ.க-வின் சிந்தனையாளர் பிரிவின் மாநில செயலாளர் கல்யாணராமன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு,  மாநில தலைமையினைப் பற்றியும் கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி, கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கி வைக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.

Tags :
BJPKalyanaramanPoliticstrichy sivaTrichy Surya
Advertisement
Next Article