”மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்.."- தவெக தலைவர் விஜய்..!
கரூரில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று விடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மைகளை எல்லாம் சொல்லும்போது, கடவுளே நேரில் வந்து உண்மைகளை சொல்வது போல் இருந்தது. நிச்சயம் விரைவில் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும். சூழலை புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த தலைவர்களுக்கும் நன்றி.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பிரச்சாரம் செய்ததை தவிற நாங்கள் வேறு எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சிஎம் சார் பழி வாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்களை விட்டு விடுங்கள்.
தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலிமையுடன் தொடரும்” என்று தெரிவித்தார்.