For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் | திருச்சி #NIT விளக்கம்!

06:31 PM Aug 30, 2024 IST | Web Editor
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்   திருச்சி  nit விளக்கம்
Advertisement

திருச்சியில் மாணவரிடம் ஒப்பந்த ஊழியர் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

திருச்சி என்.ஐ.டி. மாணவிகள் விடுதியில் மாணவிகளின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று (29.08.2024) காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அச்சமயத்தில் சாதுரியமாகச் சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட, அங்கிருந்த மற்ற மாணவர்கள் கதிரேசனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அலட்சியமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து என்.ஐ.டி. வளாகத்தில் இரவும் முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். 5 ஆண் ஊழியர்கள் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதி அறைகளுக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், மாணவிகளின் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து தலைமை விடுதி காப்பாளர் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாகத் திருச்சி என்.ஐ.டி. நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தில்குறிப்பில், “ஓபல் மகளிர் விடுதியில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஒரு தொழிலாளியின் மோசமான பாலியல் முறைகேடுகளால் என்.ஐ.டி. நிர்வாகம் வருத்தமடைந்துள்ளது. மாணவர்களை எதிர்ப்பை வெளிப்படுத்திய விவகாரம் மிகுந்த உணர்திறனுடனும் அக்கறையுடனும் பார்க்கப்படுகிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும், குறிப்பாகப் பெண் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கப் பாதுகாப்பு அதிகாரி அதிக விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement