For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்!

10:17 AM Jan 09, 2024 IST | Jeni
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்   பேருந்துகள் கிடைக்காமல் தவித்த மாணவர்கள்
Advertisement

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் எதிரொலியாக, போதிய அளவில் பேருந்துகள் கிடைக்காததால் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை நகரப் பகுதியில் 60 சதவிகித பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் போதிய பேருந்து கிடைக்காமல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இதையும் படியுங்கள் : வேலைநிறுத்தம் எதிரொலி - பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்ட அவலம்..!

சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் கல்லூரிக்குச் சென்றனர்.

Tags :
Advertisement