For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!

07:22 PM Nov 11, 2023 IST | Web Editor
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்  மதியம் 3 மணி வரை 4 53 000 பேர் பயணம்
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் உத்திரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பூவிருந்தவல்லி  மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, 2023-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை,  போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (11.11.2023) பிற்பகல், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், போருந்தினை இயக்கும் ஓட்டுநர்,  நடத்துநர்களிடம் பேருந்தினை மிகவும் கவனமுடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கணிவுடன் கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:Bigg Boss – “Game Over” என தனது X தள பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் ஆண்டனி!!

அதனைத் தொடர்ந்து,  பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில், பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணியிடம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

நேற்றைய தினம் (10.11.2023) போக்குவரத்துத் துறை அமைச்சர்  கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நவம்பர் 9 ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 634 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,37,000 பயணிகளும், நேற்றைய தினம் (10.11.2023) சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 1,822 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 2,29,000 பயணிகளும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து,  இன்று (11.11.2023) மதியம் 3.00 மணி நிலவரப்படி,  தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளில் 994 பேருந்துகளும், 1.415 சிறப்புப் பேருந்துகளில் 764 பேருந்துகளும் இயக்கப்பட்டு 87,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆகமொத்தம் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி  மதியம் 3.00 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து 8,414 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,53,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இச்சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்திட்ட  நாளது வரையில் 2,43,629 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இந்த முன்பதிவு வாயிலாக 12 கோடியே 26 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட இந்த ஆண்டு அதிக பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருப்பூர், கோயம்பத்தூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையில், இன்று (11.11.2023) மதியம் 3 மணி வரை 4,53,000 சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு பேருந்து வாயிலாக பயணம் செய்துள்ளனர்.

Tags :
Advertisement