For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது!

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.
10:45 AM May 22, 2025 IST | Web Editor
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.
டெல்லியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது
கோப்புப் படம்
Advertisement

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான இருநாட்கள் நடைபெறும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் திமுக, அதிமுக , விசிக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேர்தல் வாக்கு சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், சரிபார்ப்பு மற்றும் பட்டியல் தயாரிப்பது, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் துணை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதிலுமிருந்து இதுபோன்ற 3,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்துள்ளது.

இம்முகாமில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடுகள் போன்ற விதிகள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பங்கேற்பாளர்களை வலியுறுத்தியுள்ளார். இதைத்தவிர, இறுதி வாக்காளர் பட்டியல்களுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடுகளை முறையே மாவட்ட ஆட்சியர் அல்லது நிர்வாக அதிகாரி மற்றும் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் செய்யலாம்.

கூடுதலாக, வாக்காளர் உதவி மைய செயலி மற்றும் தகவல் தொழில்நுட்ப கருவிகள் குறித்த நடைமுறை பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் நடைபெறும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (மற்றும் வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை தடங்கள் (VVPATகள்) மற்றும் மாதிரி வாக்கு பதிவுகளை நடத்துவது குறித்து பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த ஆண்டு இறுதியில் பீகார் மற்றும் அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement