மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!
மேலூர் அருகே அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி
செயல்பட்டு வருகிறது. போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தால் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்த வகுப்பில் 42 மாணவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக மரம் வேரோடு சாய்ந்தது. இந்த விபத்தில் 12 மாணவர்கள், 5 மாணவிகள் என 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: ரூ.12,659 கோடி நிவாரணம் தேவை – மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
போதிய வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், உரிய கட்டட வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.