கனமழையால் போக்குவரத்து தடை - அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வு!
மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால், அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்னையில் பெய்த கனமழையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் சென்னை முடங்கியதால், அத்யாவசிய பொருட்களான பால், காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. போக்குவரத்து தடை, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் 2000 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.