For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!

07:49 PM Nov 04, 2024 IST | Web Editor
இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்  முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு 8 ஆவது இடம்  பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்
Advertisement

இண்டியா டுடே இதழின் இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என நீளும் இந்த பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த பட்டியலில் 8-ஆவது இடம் பெற்றுள்ள நிலையில் அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

  • அடக்கமான போர்வீரன்
  • தென் கோட்டையைப் பிடித்து வைத்திருப்பவர்.
  • மொழித் தடையால் மு.க.ஸ்டாலினின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருக்கலாம், ஆனால் பூர்வீக நிலமான தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது.
  • மக்களவையில் திமுகவுக்கு 22 எம்பிக்கள், ராஜ்யசபையில் 10 எம்பிக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 70% வாக்குகளுடன் வெற்றி வகை சூடியது.
  • எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட கிடைக்காமல் செய்தது பாஜகவுக்கு அதிக வருத்தத்தை தந்தது. எனவே, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் எஃகு போல திகழ்கிறார்
  • 2021ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதில் இருந்து, அவரது திமுக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

இவ்வாறு இண்டியா டுடே நவம்பர் மாத இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான பட்டியலில்

முதலிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மூன்றாம் இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நான்காம் இடத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, ஐந்தாம் இடத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், ஏழாம் இடத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எட்டாம் இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்பதாம் இடத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பத்தாம் இடத்தில் சாமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

Tags :
Advertisement