சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொது விடுமுறை!
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல் எதிரொலி | அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.4) தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த நிலையில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5)பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.